வைகோ எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக!

0
121

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் மேலும் ஒரே ஒரு தொகுதியின் கொடுத்த திராவிட முன்னேற்ற கழகம் சட்டசபை தேர்தலில் நான்கு முதல் ஆறு தொகுதிகள் தான் என்று தெரிவித்திருப்பது வைகோவை ஏமாற்றமடைய செய்திருக்கிறது என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் வரை திமுகவிற்கு எதிர் அணியில் இருந்தவர் வைகோ ஸ்டாலினை தமிழக முதலமைச்சர் பதவியில் அமர விடமாட்டேன் என்று உறுதி ஏற்று கடந்த முறை விஜயகாந்த அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி மக்கள் நல கூட்டணியை உருவாக்கியவர் சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்ததை முன்னிட்டு மனம் மாறிய வைகோ திமுக கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார் மேலும் ஸ்டாலினை முதல்வராக்க பாடுபடுவேன் என தெரிவித்தார்.

ஆனால் வைகோவை திமுக சற்று தள்ளியே வைத்திருக்கின்றது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு தலா இரண்டு தொகுதிகளில் ஒதுக்கிய அந்த கட்சி மதிமுகவிற்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியது ஆனாலும் கூட ராஜ்யசபா உறுப்பினர் பதவி என திமுக கொடுத்த வாக்குறுதி காரணமாக வைகோ கூட்டணியில் தொடர்ந்தார் ஆனாலும் ஒரே ஒரு தொகுதி ஒதுக்கபட்டதன் காரணமாக வைகோ அந்த கட்சியின் மீது வருத்தத்தில் இருந்து வந்தார் ஆனாலும் வேறு வாய்ப்பும் கிடையாது என்ற காரணத்தால் அந்த ஒரு தொகுதியுடன் திருப்தி அடைந்து இருந்தார் வைகோ.

அதேநேரம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைகோ தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட வில்லை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னரும் கூட வைகோ பெரிய அளவில் அரசியல் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டவில்லை ஆகவே இந்த நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் தற்போது மறுபடியும் அரசியல் செயல்பாடுகளில் வைகோ தீவிரம் காட்ட வேண்டிய நேரம் வந்திருக்கின்றது ஆனால் திமுகவின் கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளை அழைத்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உத்தேச தொகுதிகளின் எண்ணிக்கையின் விவரங்களை அந்த கட்சியின் தலைமை கூறி வருகின்றது.

அதன்படி வைகோ கட்சியான மதிமுகவிற்கு 4 முதல் அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன ஆனால் வைகோ இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கிறார்கள் ஆனாலும் திமுக மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முன்னேற்றம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகின்றது இந்த நிலையில் வைகோ தன்னுடைய மாவட்டச் செயலாளர் உடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை நடத்துவதற்கு முடிவு செய்திருக்கின்றார்.

இந்த ஆலோசனையின் போது திமுகவின் தரப்பில் சட்டசபை தேர்தலுக்கு தருவதாக கூறி இருக்கின்ற தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் கொடுக்கும் தொகுதிகளுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது வேண்டாமா என்று மாவட்டச் செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகின்றது இந்த ஆலோசனையில் அநேக மாவட்டச் செயலாளர்கள் கூட்டணி தேவையில்லை என்று தெரிவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது வைகோவின் முடிவு என்ன என்பது மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் முடிந்த பின்புதான் தெரிய வரும்.

Previous articleசெமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு..!! வெளியான முக்கிய அறிவிப்பு!
Next articleதொடர் மழையால் பாதிப்பு: இன்று முதல் இவர்களுக்கு இலவச உணவு! அசத்தல் திட்டம்!!