எலுமிச்சை என்றாலே நமது உடல் நலத்திற்கும் சரி ஆன்மீகம் ரீதியாகவும் சரி, நன்மையை தரக்கூடியதாகவே விளங்குகிறது. இந்த எலுமிச்சம் பழம் ஆனது மனிதர்களிடம் உள்ள தேவையற்ற எதிர்வினை ஆற்றல்களை நீக்குகிறது. எலுமிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் ஏழு உலகங்களுக்கு அப்பால் உள்ள நவகிரகங்களையும் நம்மால் ஈர்க்க முடியும் என்பது நமது முன்னோர்களின் கருத்து. எலுமிச்சம் பழம் ஆனது நமது உடல் நலத்திற்கும் பல விதங்களில் உதவி வருகிறது.
பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலி, வாந்தி, காலரா கிருமிகள் மற்றும் நமது வாயில் உள்ள கிருமிகள் போன்ற அனைத்துக்கும் சிறந்த மருந்தாக எலுமிச்சம் பழம் விளங்குகிறது. இது மட்டுமல்லாமல் இன்னும் பல வித நோய்களுக்கு மருந்தாகவும் விட்டமின் C உள்ள எலுமிச்சம் பழம் உதவுகிறது. விஞ்ஞானம் ரீதியாக எலுமிச்சம் பழம் எவ்வாறு பலவிதங்களில் உதவி வருகிறதோ அதே மாதிரி ஆன்மீகம் ரீதியாகவும் பல நன்மைகளை செய்து வருகிறது.
புதிய எலுமிச்சம் பழத்தின் மீது ஒரு விதமான பளபளப்பு இருக்கும் அது மனிதர்களை கதிர்வீச்சுகளிடம் இருந்து பாதுகாக்க கூடிய ஒரு விதமான பாதரசம் ஆகும். அதேபோன்று மற்றவர்களிடமிருந்து வரக்கூடிய பொறாமை, கண் திருஷ்டி போன்றவற்றில் இருந்தும் மனிதர்களை காக்கும். நாம் வெளியில் செல்கிறோம் என்றால் கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக்கொண்டு செல்வதன் மூலம் பல விதமான சக்திகளையும், தைரியத்தையும் கொடுக்கும். எனவே எலுமிச்சம் பழத்தை நமது வீட்டின் நிலை வாசலில் கட்டுவது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று.
எலுமிச்சம் பழத்தின் உள்ளே இருக்கக்கூடிய விதைகள் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக கூறப்படுகிறது. அந்த விதைகளை சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு பூஜை அறையில் வைத்துக் கொள்வதன் மூலம் பணவரவு, குழந்தைகளின் படிப்பறிவு ஆகிய அனைத்துமே சிறந்து விளங்கும். உடல் ரொம்ப சோர்வாகவும், அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனாலும் எலுமிச்சம் பழத்தில் சிவப்பினை தடவி தலையை சுற்றி போடுவதன் மூலம் கண் திருஷ்டிகள் அனைத்தும் நீங்கும்.
நமது வீட்டின் நிலை வாசலில் எலுமிச்சம் பழத்தை கட்டும் பொழுது நவகிரகங்களின் ஆசி மற்றும் குலதெய்வத்தின் ஆசி ஆகிய அனைத்துமே கிடைக்கும். மேலும் கண் திருஷ்டிகள், நோய்கள் போன்ற எதுவும் நமது வீட்டிற்குள் வராமல் தடுக்கப்படும்.