முதலாளிகளை பாதுகாக்கும் அரசு அடித்தட்டு மக்களை கண்டு கொள்ளாதது ஏன்? கனிமொழி காட்டம்!

Photo of author

By Sakthi

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று மக்களவையில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உரையாற்றினார். அப்போது விலைவாசி உயர்வு காரணமாக, ஏழை மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டமாக மாறி இருக்கிறது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது என தெரிவித்துள்ளார்.

தற்சமயம் சுமார் 15,000 பெட்ரோல் மற்றும் டீசல் மற்றும் செலவிட வேண்டி உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் உணவுப் பொருட்களின் நிலையும் அதிகரித்திருக்கிறது. சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்பட்டிருக்கிறது நாட்டில் இருக்கின்ற சில தொழிலதிபர்கள் வாழ்வதற்கு அரசு உதவி செய்து வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அடித்தட்டு மக்களுக்கு உதவி செய்ய தயக்கம் காட்டும் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து உதவி புரிந்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது என உரையாற்றி இருக்கிறார் கனிமொழி.

விலைவாசி உயர்வு தொடர்பாக சிறுமி ஒருவர் பிறந்தநாள் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். பென்சில் விலை கூட அதிகரித்திருப்பதாக அந்த சிறுமி கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார். நோய் தொற்றுக் காலத்தில் பலர் வேலை இழந்து பரிதவித்து வந்தனர் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை கொடுத்தாலே போதும் நாங்கள் யாரிடமும் கடன் வாங்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் கனிமொழி.

இதனை தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்காளி, வெங்காயத்தின் விலை குறைந்திருப்பதாக தெரிவித்தார் 3 வேளையும் சட்னியை மட்டும் அரைத்து சாப்பிட முடியுமா? என கனிமொழி கேள்வியெழுப்பினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக, 50000 சிறு, குறு, தொழிலில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன இன்று வரையில் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள்பின் கருப்பு பணம் புழங்கி வருகிறது அது ஏன்? என கேள்வி எழுப்பி இருக்கிறார் கனிமொழி.