மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்யலாமா? மூலம் நட்சத்திரம் ஆபத்தானதா

0
4
Can you marry a girl born under a star? Is the star dangerous by?
Can you marry a girl born under a star? Is the star dangerous by?

மூலம் நட்சத்திரத்தில் பெண் குழந்தைகள் பிறந்தாலே அக்குழந்தைகளின் திருமணத்தை எண்ணி பெற்றோர்கள் கவலைப்பட ஆரம்பித்து விடுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் ‘ஆண் மூலம் அரசாலும், பெண் மூலம் நிர்மூலம்’ என்று தொடர்ந்து இக்காலம் வரையிலும் கூறப்பட்டு வருகிறது. மூலம் நட்சத்திரம் என்பது அவ்வளவு ஆபத்தானதா? அது பெண்களின் வாழ்க்கையை உண்மையிலே பாதிக்குமா? என்பது குறித்து காண்போம்.

உண்மையிலே மூலம் நட்சத்திரம் என்பது ‘முதன்மை நட்சத்திரம்’ ஆகும். அதாவது மூலம் என்பது ‘தொடக்கம்’ என பொருள்படும். 27 நட்சத்திரங்களில் முதன்மையான நட்சத்திரம் இந்த மூல நட்சத்திரமாகும். இதன் உண்மையான பழமொழி என்னவென்றால் “ஆணி மூலம் அரசாலும் ஆணிப் பின் மூலம் நிர்மூலம்” என்பது ஆகும். இதுதான் தற்போது ஆண் மூலம் அரசாலும் பெண் மூலம் நிர்மூலம் என்று கூறப்பட்டு வருகிறது.

தனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்து கொண்டால் மாமனாருக்கு ஆகாது என்ற தவறான கருத்து பரவி வருகிறது. பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறப்பது என்பது அதிர்ஷ்டம் என்றே ஜோதிடம் கூறுகிறது.
இந்த மூலம் நட்சத்திரத்தில் ஒருவர் பிறக்க வேண்டும் என்றால் பூர்வ புண்ணிய பலன் வேண்டும் என்று கூறப்படுகிறது. மூலம் நட்சத்திரம் என்பது அனைத்து கடவுள்களின் அருளால் கிடைக்கக்கூடிய ஒரு வரமாகவும் கூறப்படுகிறது.

பொதுவாக இந்த மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களின் உதவியை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் இவர்கள் மற்றவர்களின் உதவி கிடைக்கவில்லையே என்று உடைந்து போக மாட்டார்கள். நினைத்ததை நினைத்தபடி தனது வெற்றியை காண்பவர்களும் இவர்தான். மேலும் இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை என்பது சற்று அதிகமாகவே இருக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த ஒரு ஆண் அல்லது பெண் திருமணமாகி செல்லும்போது அந்த வீட்டின் வளர்ச்சியானது ஆயிரம் மடங்கு அதிகரித்து காணப்படும். எனவே பழங்கால கதைகளை நம்பாமல் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்வது குடும்பத்திற்கு அதிர்ஷ்டத்தை தரும் என்றும் கூறப்படுகிறது.

Previous articleதாய்ப்பால் அதிகமாக சுரக்க.. தாய்மார்கள் இந்த ஒரு குழம்பு செய்து ஒருவேளை சாப்பிடுங்கள்!!
Next articleஅர்ச்சனை தேங்காய் எப்படி உடைந்தால் பலன் தரும்!! அழுகி இருந்தால் தீங்கு நடக்குமா?