உப்பு என்பது மகாலட்சுமிக்கு இணையான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அத்தகைய மகாலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்தோம் என்றால் அள்ள அள்ள குறையாத செல்வம் நமது வீட்டில் சேரும் என்பது ஒரு நம்பிக்கை.
அந்த வகையில் உப்பு ஜாடிக்கு இருக்கும் சக்தி என்ன? உப்பு ஜாடியின் பக்கத்தில் எண்ணெயை வைக்கலாமா? செல்வம் பெருக இந்த உப்பு ஜாடியை என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சந்தேகங்கள் குறித்து தற்போது காண்போம்.
கடலில் வாசம் செய்யக்கூடிய இந்த மகாலட்சுமிக்கு உப்பு என்பது தாய் வீட்டு சீதனம் போன்றது. குடும்பத்தில் சுபிட்சம் பெருக கல் உப்பு என்பதை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சமையலுக்கு உப்பை பயன்படுத்தும் பொழுது, கல் உப்பை அதிகம் பயன்படுத்தினால் ஆரோக்கியம் மேம்படும் என்று அறிவியல் கூறுகிறது.
நமது முன்னோர்கள் கூறிச் சென்ற ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும், ஒவ்வொரு அர்த்தங்கள் ஒளிந்து கொண்டிருக்கும் என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த உப்பை நமது தாய்மார்கள் மற்றும் பாட்டிமார்கள் எப்பொழுதும் அடுப்பிற்கு அருகில் தான் வைத்திருப்பார்கள்.
அடுப்பு என்பது எப்பொழுதும் கிழக்கு நோக்கி வைத்து மேற்கு பார்த்தவாறு இருப்பது தான் சரியானது. அதாவது நீங்கள் சமைக்கும் பொழுது கிழக்கு திசையை பார்த்தவாறு சமைக்க வேண்டும். காலை நேரத்தில் சூரிய ஒளி கதிர்கள் உங்கள் அடுப்பின் மீது படுவது மிகவும் விசேஷமானது. இத்தகைய அனுஷம் உள்ள வீட்டில் செல்வம் ஆனது அதிகம் பெருகும்.
அடுப்பிற்கு வலது பக்கத்தில் உள்ள மூலையில் மகாலட்சுமியின் அம்சமாக திகழக்கூடிய இந்த கல் உப்பை வைப்பது மிகவும் சிறப்பானது. இந்த உப்பு ஜாடையை எப்பொழுதும் தரையில் வைக்க கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கல் உப்பை பிளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு வைப்பதை தவிர்ப்பது நல்லது.
பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் மட்டுமே கல் உப்பை வைக்க வேண்டும். இந்த உப்பு ஜாடியை வெறும் தரையில் கீழே வைக்காமல், ஒரு தட்டு அல்லது ஒரு சிறிய பலகையின் மீது வைக்க வேண்டும். உப்பு ஜாடியில் முதலில் ஒரு ரூபாய் நாணயத்தை தான் வைக்க வேண்டும்.
அதன் பிறகு உப்பு வாங்கும் கிழமை வெள்ளிக் கிழமையாக இருப்பதும் சிறப்பு. ஒரு ரூபாய் நாணயத்தை முதலில் வைத்து அதன் பிறகு தான் உப்பை கொட்ட வேண்டும். உப்பினை எப்பொழுதும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் வெள்ளிக் கிழமைகளில் உப்பு ஜாடியை கழுவ கூடாது.
புதன், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உப்பு ஜாடியை நன்றாக கழுவி, வெயிலில் காயவைத்து பின்பு உப்பை கொட்டி வைத்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும், குடும்பம் முன்னேற்றத்திற்கும் நல்லது.
இவ்வாறு உப்பு ஜாடியை கழுவிய பின்பு அதில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, திரும்ப உப்பை கொட்டி வைப்பது மகாலட்சுமியின் அம்சத்தை பெற்று தரும். இதனால் வீட்டில் செல்வமானது குறையாமல் இருக்கும். அதேபோன்று உப்பு ஜாடிக்கு அருகிலேயே எண்ணெயை வைப்பது தான் சிறந்த முறை.
சமையலுக்கு எந்த எண்ணெயை பயன்படுத்துவதாக இருந்தாலும், அதனை உப்பு ஜாடியின் பக்கத்தில் தான் வைக்க வேண்டும். உப்பு ஜாடியை தனியாகவும் எண்ணெய் ஜாடியை தனியாகவும் வைக்கக் கூடாது. இவ்வாறு பிரித்து வைத்தால் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே உப்பு ஜாடியையும், எண்ணெய் ஜாடியையும் அருகருகே தான் வைக்க வேண்டும்.