கனரா வங்கி சேமிப்பு கணக்குகளின் மத்தியில் சமீபத்தில் மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் அமலுக்கு தற்போது வந்திருக்கிறது. இது தொடர்பாக விரிவாக நாம் பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கிகளில் தனி முத்திரை பதிப்பும் கனரா வங்கி தன்னுடைய சேமிப்பு கணக்கு வட்டி விகிதங்களை மாற்றியமைத்திருக்கிறது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி புதிய விகிதங்கள் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கின்றன. இந்த மாற்றத்திற்கு பிறகு வங்கி தற்போது சேமிப்பு வங்கி கணக்குகளுக்கு 4 சதவீதம் வரையில் வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கி கணக்கில் சராசரி மாத இருப்பு தொகை நகர்ப்புறம் மற்றும் நகர்புற மெட்ரோ பகுதிகளில் இருக்கின்ற கிளைகளுக்கு 1000 ரூபாய் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கின்ற கிளைகளுக்கு 500 ரூபாய் ஆகும்.
கனரா வங்கி தற்போது 50 லட்சத்திற்கும் குறைவான நிலுவை தொகையை கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு 2.90% வட்டி விகிதத்தை வழங்குகிறது 50 லட்சம் முதல் 5 கோடி வரையில் நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு கனரா வங்கி தற்போது 2.95% வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதேபோன்று 5 கோடி முதல் 10 கோடி வரையில் நிலுவைத் தொகை கொண்ட கணக்குகளுக்கு கனரா வங்கி 3.05 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
நிலுவைத் தொகை 100 கோடி முதல் 500 கோடி ரூபாய் வரையில் இருக்கின்ற கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 3.10 சதவீதமாகும். 500 கோடி முதல் 1000 கோடிக்கு குறைவான நிலுவைத் தொகை கொண்ட கணக்குகளுக்கு வட்டி விகிதம் 3.40 சதவீதம் வழங்கப்படுகிறது. கனரா வங்கி தற்போது அதிகபட்சமாக சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீதம் வரையில் வட்டியை மாற்றியமைத்துள்ளது.