இன்றைய உலகமானது மொபைல் போன்களால் மட்டுமே நிறைந்து காணப்படுகிறது. இன்று அனைத்து வீடுகளிலும் மற்ற இயந்திரங்கள் இருக்கிறதோ இல்லையோ ஆனால் மொபைல் போன் இல்லாமல் மட்டும் இருக்கவே இருக்காது. அனைத்து மக்களுக்கும் அவசியமான ஒன்றாக இன்று மொபைல் போன் திகழ்கிறது.
வீட்டில் இருக்கும் பொழுதும் சரி, வெளியில் செல்லும் பொழுதும் சரி, மொபைல் போன் இல்லாமல் நாம் இருப்பது இல்லை. அவ்வாறு அதிக அளவு மொபைல் போன்களை பயன்படுத்துவதால் அழுக்குகள் மற்றும் தூசிகள் மொபைல் போன்களில் படிந்து விடுகிறது. குறிப்பாக போனின் ஸ்பீக்கரில் தூசிகள் சிக்கிக் கொள்வதால் மற்றவர் பேசுவதை குறைந்த அளவே கேட்க முடிகிறது.
இந்த அழுக்கான போன் ஸ்பீக்கரை சுத்தம் செய்வதற்கு என சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தினால் ஸ்பீக்கரில் உள்ள அழுக்குகள் நீங்கி மற்றவர் பேசுவதை நன்றாக கேட்கலாம்.
1. பல் துலக்கும் பிரஸ்: நாம் தினமும் பல் துலக்கும் பிரஷ் ஆனது நமது போனின் ஸ்பீக்கருக்கு பாதுகாப்பாகவே இருக்கும். எனவே அந்த பிரஷை கொண்டு ஸ்பீக்கரின் துவாரங்களை மெதுவாக தேய்ப்பதன் மூலம் உள்ளே உள்ள அழுக்குகள் நீங்கும்.
2. நமது மொபைல் போனின் ஸ்பீக்கரை சரி செய்வதற்கு என ஒரு விதமான ஒலிகளை எழுப்பக்கூடிய இசையை வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த ஒலிகளை நமது மொபைல் போனில் ஒலிக்க வைப்பதன் மூலம் உள்ளே உள்ள அழுக்குகள் வெளியே தள்ளி அகற்றப்படுகிறது.
3. பருத்தி: ஒரு சிறிய மெல்லிய குச்சி ஒன்றை எடுத்து அதில் ஒரு சிறிய துண்டு பருத்தியினை சுற்றி அதாவது நமது போன் ஸ்பீக்கரின் அளவுக்கு மெல்லிய குச்சியில் பருத்தியினை சுற்ற வேண்டும்.
இப்பொழுது அதனை மெதுவாக ஸ்பீக்கரின் துவாரங்களில் வைத்து தேய்க்க வேண்டும் இதனால் அழுக்குகள் வெளியேற்றப்படுகிறது.
இவ்வாறு மொபைல் போனின் ஸ்பீக்கரை சுத்தம் செய்யும் பொழுது பொறுமையாகவும், மெதுவாகவும் செய்ய வேண்டும். மாறாக அதிக அழுத்தத்தை கொண்டு அல்லது அதிக வேகமாக இந்த வேலைகளை செய்தால் நமது மொபைல் போன் பாதிப்புக்கு உள்ளாகும் அல்லது மொபைல் போனின் ஸ்பீக்கர் பாதிப்பு அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
குறிப்பாக தண்ணீரைக் கொண்டு மொபைல் போனை சுத்தம் செய்யக்கூடாது. இது மொபைல் போனை செயலிழக்க செய்யும் மற்றும் ஸ்பீக்கர் பாதிக்கப்படும்.