என்னதான் ஏசி, ஏர் கூலர் என பல விதமான பொருட்கள் வந்தாலும் கூட நடுத்தரமான குடும்பங்களில் பெரும்பாலும் சீலிங் ஃபேன் தான் உள்ளது. இந்த சீலிங் ஃபேன் மழைக்காலங்கள் மற்றும் குளிர்காலங்களில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் அதாவது வேகம் 2 ல் வைத்தால் கூட அதிக காற்றை கொடுக்கும். ஆனால் இந்த வெயில் காலத்தில் தான் நம்மை பழிவாங்கும் விதமாக வேகம் 5 ல் வைத்தால் கூட சிறிது காற்றையே தரும்.
மேலும் தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பத்தின் தாக்கத்தால், சீலிங் ஃபேன் நன்றாக ஓடினாலும் கூட அந்த காற்று நமக்கு பத்தாது. எனவே ஏசி, ஏர் கூலர் போன்றவற்றை வாங்க இயலாதவர்கள் உங்களது வீட்டில் இருக்கும் சீலிங் ஃபேன் வைத்தே, ஏசியில் இருந்து வரக்கூடிய குளுகுளு காற்றை பெற முடியும்.
ஏசி போன்ற குளிர்ச்சியான காற்றை பெறுவதற்கு நான்கு அல்லது ஐந்து தேங்காய் சிரட்டைகள் இருந்தாலே போதும். சீலிங் ஃபேன் மட்டுமே உள்ள வீடுகளில் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை எதிர்பார்ப்பது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் இரவு நேரங்களில் தான் வீட்டின் உள்ளே வெட்கை அதிகமாக இருக்கும்.
மேலும் சிறு குழந்தைகள் இந்த வெயிலின் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். அதாவது வியர்வையின் காரணமாக தோல் அலர்ஜிகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே தூங்கும் நேரத்தில் படுக்கை அறையில் இந்த தேங்காய் சிரட்டையை வைத்து, ஏசி போன்ற குளிர்ச்சியான காற்றை பெற்றுக் கொள்வதற்கான செயலை செய்தால் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் தேங்காய் சிரட்டைகளை வைத்து ஃப்ரிட்ஜில் உள்ள பிரீசரில் வைத்து விட வேண்டும். அந்த தண்ணீர் நன்கு கட்டியான பின்னர் அதனை எடுத்து விட வேண்டும். இப்பொழுது அதனை சீலிங் ஃபேன் னிற்கு அடியில் ஒரு துணியினை போட்டு, அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து விட வேண்டும்.
இப்பொழுது ஃபேன் சுச்சை ஆன் செய்தால், கீழே உள்ள ஐஸ் கட்டியின் குளிர்ச்சியை பேன் காற்று இழுத்து, குளிர்ச்சியான காற்றை நமக்கு கொடுக்கும். நாம் வைத்திருக்கும் பாத்திரத்திற்கு அடியில் கண்டிப்பாக ஒரு துணியை வைத்து விட வேண்டும்.
ஏனென்றால் ஐஸ் கட்டி உருக உருக பாத்திரத்தில் இருந்து சிறிதளவு தண்ணீர் வெளியேறத் தொடங்கும். எனவே பாத்திரத்திற்கு அடியில் ஒரு துணியை வைத்து விட வேண்டும்.
வீட்டில் ஏசி இல்லாதவர்கள் மற்றும் குளிர்ச்சியான காற்றை எதிர்பார்ப்பவர்கள் இந்த எளிமையான முறையை பயன்படுத்தி நிம்மதியான உறக்கத்தை பெறலாம்.