மகரம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

Photo of author

By Selvarani

மகரம் -இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நிலவுவதால் எந்த ஒரு விஷயத்திலும் செயல்பட்டால் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். வாகனப் பயணங்களில் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய சிறு சிறு அபிப்பிராய வேதங்கள் எழலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உங்கள் பிரச்சனைகளை மூன்றாவது நபரிடம் சொல்வது உங்களுக்கு பிரச்சனையை உண்டாக்கும்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் இருக்கும் முயற்சிகள் சற்று இழுபறி ஆகும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது நல்லது. கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு உடலில் ஒரு வித சோர்வு அசதி வந்து மறையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் அதிகம் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் படிப்பில் துல்லியமான கவனத்துடன் செயல்பட வேண்டும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியத்தை கவனத்துடன் செயல்படுவது நல்லது. வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு வேலையிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.