மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள்!!

0
134
#image_title

மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள்!!

மகர ராசியில் அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் சலசலப்பு மாலையில் கலகலப்பும் உண்டாகும் நாள். காலையில் சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் சில பிரச்சனைகள் வரலாம் பொறுமையாக செயல்படும் வகையில் மாலையில் சந்தோஷம் வந்து சேரும். கணவன் மனைவியை ஒற்றுமை குறைவாக இருக்கும் என்பதால் அமைதியாக செயல்படுத்த வேண்டும்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் வந்து சேரலாம். அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதி காப்பது மிகவும் கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் காலதாமதம் ஆகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உடலில் ஒரு வித சோர்வு வந்து மறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சில நேரங்களில் சில வேலைகள் இழுபறி ஆகலாம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன நிற ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani