மகரம் – இன்றைய ராசிபலன்! உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

Photo of author

By Selvarani

மகரம் – இன்றைய ராசிபலன்! உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள்!!

மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் தன வரவு தாராளமாக வந்து சேரும்.

 

குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை அருமையாக பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். நிதி அற்புதமாக உள்ளதால் சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் வந்து சேரும். கணவன் மனைவியை அதிக அற்புதமான அன்யூனியம் நிலவுவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

 

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் சுபிட்சகரமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் அதி அற்புதமான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை இன்றைய தினம் துணிந்து செய்யலாம்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பைப் பெற்று மகிழ்வார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் அருமையாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு இது கொண்டாட்டமான நேரம். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் .

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து சரஸ்வதி தேதியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.