மகரம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள்!!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு புதிய பாதை புலப்படும் நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வேறு தொழில்களை ஆரம்பிக்கலாமா என்ற எண்ணம் மேலோங்கும் அதற்குண்டான பாதைகள் இன்றைய தினம் வந்து சேரும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஓரளவுக்கு சிறப்பான சூழ்நிலைகள் அமையும்.
வருமானம் வந்து சேரலாம். உத்தியோகத்தில் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய புள்ளிகளாக மாறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் வெற்றி பெறுவார்கள்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான வளர்ச்சி உருவாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சில சொத்து சேர்க்கைகள் உண்டாக்கலாம்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.