லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!!

0
188
#image_title
லியோவுடன் மோதும் கேப்டன் மில்லர்! அதிகாரப்பூர்வமாக சொன்ன தயாரிப்பாளர்!
நடிகர் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சிறய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், நிவேதிதா சதீஸ், காளி வெங்கட் மற்றும் பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது. கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன் அவர்கள் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து சிறிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன் “நாங்கள் கேப்டன் மில்லர் திரைப்படத்தை விடுமுறை நாட்களை குறிவைத்து ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி அக்டோபர் மாதத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியட முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.
நடிகர் விஜய் அவர்கள் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகின்றது. தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன் அவர்கள் கூறியதை வைத்து ரசிகர்கள் பலரும் லியோ திரைப்படமும் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஒன்றாக வெளியாகவுள்ளது என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.