கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்!! தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு!!

0
97
Captain Miller Movie Update!! Dhanush's film crew will surprise fans one after the other!!
Captain Miller Movie Update!! Dhanush's film crew will surprise fans one after the other!!
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்!! தனுஷ் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் படக்குழு!!
நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முக்கியமான அப்டேட் வெளியாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் படக்குழு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கின்றார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரிக்கும் சத்திய ஜோதி நிறுவனம் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்டை மே 10ம் தேதி மாலை வெளியிடப்படும் என்று அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பின் படி கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது.
நேற்று வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட் என்னவென்றால் கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும், கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.