வைட்டமின் A நிறைந்த கேரட்.. நாவூற வைக்கும் பாயசம் எப்படி செய்வது?

0
129

கேரட்டில் உள்ள வைட்டமின் A பார்வை திறனை மேம்படுத்துகிறது. கேரட்டில் கலோரிகள் குறைவாக உள்ளதால் டயட்டில் இருப்பவர்கள் அதனை உணவில் சேர்த்து கொள்ளலாம். கேரட்டில் சுவையான பாயாசம் செய்து கொடுத்தாக் வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம்.

தேவையானவை :

கேரட் – 250 கிராம் வெல்லம் – கால் கப் தண்ணீர் – தேவையான அளவு தேங்காய் பால் – ஒரு கப் ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன் உப்பு – ஒரு சிட்டிகை நெய் – இரண்டு டீஸ்பூன் முந்திரி, திராட்சை – தேவையான அளவு

செய்முறை :

கேரட்டை விழுதாக அரைத்து கொள்ளுங்கள். வெல்லத்தை கரைத்து தனியே வைத்து கொள்ளுங்கள். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வெல்ல கரைசலை கொதிக்க விடவும்.

அதில், கேரட் விழுதை சேர்த்து கொதிக்க விடுங்கள். கொதிவந்ததும் அதில் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடுங்கள். அதனுடன் ஏலக்காய் தூள், நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான கேரட் பாயசம் தயார்.

Previous articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிர்ஷ்டமான நாள் !
Next articleவேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு 2 லட்சம் பரிசு.. விவரங்கள் இதோ…!