கே எஸ் அழகிரி மீது வழக்கு! அதிர்ச்சியில் காங்கிரசார்!

0
121

மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களை விபரிக்கும் விதமாக ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லியிலேயே போராட்டம் நடந்து வருகின்றது. விவசாயிகளுடைய கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வரும் காரணத்தால், கடுமையான குளிரிலும் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குளிரால் இதுவரை 40க்கும் அதிகமான விவசாயிகள் மாண்டு போயிருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், தமிழ்நாட்டில் அந்த கட்சியினர் ஆங்காங்கே ஏர் கலப்பையுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னை,புதுக்கோட்டை போன்ற பல இடங்களில் போராட்டம் நடந்தது இந்த நிலையிலே, வேலூரில் அனுமதி இல்லாமல் மாநாடு நடத்தியதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே. எஸ்.அழகிரி போன்றோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த மாநாட்டில் பங்கு பெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அனுமதி இன்றி அந்த கட்சியினர் அந்தக் கட்சியின் நிறுவன நாள் ஏற்கலப்பை மாநாடு நடத்தியதால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleதுரைமுருகனுக்கு செக் வைத்த எடப்பாடியார்! ஷாக்கான திமுக வட்டாரம்!
Next articleகடும் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு உத்தரவு!