அதிமுக அலுவலக கலவரம் தொடர்பான வழக்கு! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி காவல்துறை!

Photo of author

By Sakthi

அதிமுக அலுவலக மோதல் வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.

சென்ற ஜூலை மாதம் 16ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் நடைபெற்றது அப்போது பன்னீர்செல்வம் தன்னுடைய ஆதரவாதத்துடன் ராயப்பேட்டையில் இருக்கின்ற தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். அந்த சமயத்தில் பன்னீர்செல்வம் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் உண்டானது.

அந்த மோதலில் காவல்துறையினர் உட்பட 47 பேர் காயமடைந்தனர் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தனர். அலுவலகத்தில் இருந்து கோப்புகள் மற்றும் ஆவணங்களை பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் திருடி சென்றதாக காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது இந்த விளக்கை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் அவருடைய தலைமையிலான குழுவில் ஆய்வாளர்கள் லதா ரம்யா ரேணுகா செல்வின் சாந்தகுமார் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் அதே சமயத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் டிஜிபி அலுவலகத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை ஆரம்பிக்கவில்லை சரியான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான நிலையில், இன்று இந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையை துவங்கிய சிபிசிஐடி அதிகாரிகள் அதிமுகவின் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ராஜா, பூபதி, வெங்கடேசன், உட்பட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர் அப்போது அதிமுகவின் அலுவலகத்திற்கு அந்த கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர்.