சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா?

சிறுத்தையுடன் மோதும் பூனை! எதற்காக இருக்கும்? இவர்களுக்குள்ளும் சொத்து தகறாரா?

மராட்டிய மாநிலத்தில் நாசிக் என்ற இடத்தில் ஒரு கிணற்றின் அருகே இருந்த பூனையை பிடிக்க சிறுத்தை முயன்றது. ஆனால் பூனையோ சிறுத்தையிடம் இருந்து தப்பிப்பதற்காக கிணற்றிலிருந்த விளிம்புக்குச் சென்று நின்றது. ஆனால் சிறுத்தையோ அதை விடாமல் துரத்திச் சென்றது. அதன் காரணமாக அதை கவனிக்காமல் கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

பின் பூனையை அதே விளிம்பு சுவர் மீது நின்று பூனையை லாவகமாக பிடித்து விடலாம் என்று முயன்றது. வேறு எதற்கு இரையாக உண்ணத்தான். அப்போது அந்த பூனை அந்த சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்து நேருக்கு நேர் மோதுவது போல் நின்றது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக, வைரலாகி வருகிறது. நாசிக் தெற்கு மண்டல துணை வனப்பாதுகாவலர் பங்கஜ் கர்க் இது பற்றிக் கூறும்போது பூனையை துரத்திய சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது.

பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு காட்டுக்குள் விட்டனர் என்று தெரிவித்திருந்தார். பதறிய காரியம் சிதறும் என்று இதைத் தான் சொல்லுவார்களோ? சிறுத்தை பொறுமையாக இருந்திருந்தால் பூனையை பிடித்திருக்கலாம். பூனையை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சிறுத்தை அந்த கிணற்றின் மதில் சுவரை கவனிக்காமல் உள்ளே குதித்து விட்டது. ஆனால் பூனை செய்த காரியத்தை பாருங்கள்.

அதுதான் சொல்வார்கள் போல. எல்லாருக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு விஷயத்திற்காக  பயப்பட வேண்டும். இல்லை அதற்கு எதிர்த்து நிற்க வேண்டும். அது போல் இந்த ஐந்தறிவு படைத்த பூனை கூட துணிவாக நிற்கும் போது, நாம் பார்க்கும் பிரச்சினைகள் என்ன நமக்கு பெரியதா என்ன? நாமும் போராடுவோம் வாழ்க்கையுடன். நம்பிக்கையோடு போராடி வெற்றி காண்போம்.

Leave a Comment