தென்மேற்கு பருவமழை ஆரம்பத்திலிருந்து தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் இந்த கனமழை தொடர்ந்து வருவதால் மேட்டூர் அணைக்கு வழக்கத்தை விடவும் நீர் வரத்து அதிகமாக இருக்கிறது.
ஆகவே மேட்டூர் அணையிலிருந்து 2,10000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டிருப்பதால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே தர்மபுரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருப்பூர், கடலூர், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
அதாவது மேலே தெரிவிக்கப்பட்ட மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கைப்பேசி குறுஞ்செய்தி மூலமாக அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்களும் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும், சொல்லப்படுகிறது.
ஆனால் இதில் நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், மயிலாடுதுறை, நீலகிரி, போன்ற மாவட்டங்களில் காவேரி கரையோரம் இருக்கின்ற 31 கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் சுமார் 4,035 பேரை பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்திருக்கிறார்கள். இதில் 1,608 பேர் ஆண்கள், அதே போல 1827 பேர் பெண்கள் எனவும், மேலும் 600 குழந்தைகளும், இருக்கின்றார்கள். அதோடு இவர்கள் 1327 குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக 49 முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு தேவையான உணவு போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், வருவாய் பேரிடர் துறை அதிகாரி தெரிவித்தார்.
இவை அனைத்தையும் தவிர்த்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர், நீலகிரி, போன்ற மாவட்டங்களிலும் தொடர் மடையன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது ஆகவே அங்கு இருக்கக்கூடிய மக்களும் உஷார் படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் கன்னியாகுமரி, நீலகிரி, திருச்சி, போன்ற மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையும் தயார் நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு மீட்பு படையிலும் 22 வீரர்கள் இருக்கிறார்கள்.
இதைத் தவிர்த்து மாவட்ட நிர்வாகம் சார்பாக நீச்சல் தெரிந்த வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
கோயம்புத்தூர், நீலகிரி, போன்ற மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அங்கே உஷார் நிலையில், அதிகாரிகள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.