சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!!

Photo of author

By Sakthi

சிலை கடத்தல் கும்பலுடன் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேலுக்கு தொடர்பு.. சிபிஐ அதிரடி சோதனை!!
ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்களின் வீட்டில் சிபிஐ தற்பொழுது அதிரடி சோதனை நடத்தி வருகின்றது. சோதனை முடிவில் முக்கியமான தகவல்கள் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கடத்தப்பட்ட பல சிலைகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளார். அதாவது தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பல முக்கியமான சிலைகளை முன்னாள் அமைச்சர் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் கண்டுபிடித்து மீட்டு வந்துள்ளார்.
முக்கியமாக பழனி முருகன் கோயில் கோயிலின் உற்சவர் சிலையை மீட்டு வந்தது, மேலும் சென்னை சைதாப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 82 சிலைகள் கண்டுபிடித்தது என்று  பல முக்கியமான சிலை கடத்தல் வழக்குகளை சிறப்பாக செயல்பட்டு முடித்து வைத்துள்ளார்.
சிறப்பாக செயல்பட்ட ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வு பெறும் முன்பு வரையிலும் இவர் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்10) காலை முதல் பால்பாக்கத்தில் முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்களின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட சிபிஐ குழு அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.
முன்னாள்  ஐ.ஜி பொன் மாணிக்கவேல் அவர்கள் மீது முன்னாள் டிஎஸ்பி காதர் பாஷா அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது அவர் பணியின் பொழுது தன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும் பல்வேறு வகைகளில் தொந்தரவுகளை கொடுத்ததாகவும் காதர் பாஷா அவர்கள் பொன் மாணிக்கவேல் மீது புகார் தெரிவித்திருந்தார்.
காதர் பாஷா அவர்கள் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு கடந்த 2023ஆம் ஆண்டு பொன் மாணிக்கவேல் அவர்களின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து இன்று(ஆகஸ்ட்10) நடத்தப்படும் சோதனையானது 2023ம்  ஆண்டு கொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையாகத் தான் நடந்து வருகின்றது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த சோதனை குறித்து சிபிஐ அதிகாரிகள் “இன்னும் சோதனை நடந்து கொண்டு இருக்கின்றது. சோதனை முடிந்த பின்னர் பொன் மாணிக்கவேல் அவர்களின் வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள். குறித்த விவரம் தெரிய வரும். மேலும் அவரிடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பது குறித்து விவரமும் தெரிய வரும்” என்று கூறியுள்ளனர்.