சென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் பக்கத்தில் இருக்கும் கோத்தாரி கட்டடம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இடம் ஆனாலும் இப்போது அந்த கட்டிடத்தை சிபிஐ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கின்றது இதன் காரணமாக மு.க அழகிரி கடுப்பில் இருக்கிறார்.
கோத்தாரி கட்டிடத்திற்கும் அழகிரிக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரணை மேற்கொண்டபோது பல கோடி ரூபாய் மதிப்பிலான அந்த கோத்தாரி கட்டிடம் இப்போது முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான அழகிரியின் மகன் துரை தயாநிதி இருப்பதாக சிபிஐக்கு தகவல்களைத் தருகின்றது.
அழகிரி மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என சில நடவடிக்கைகளை எடுத்து வந்தார் அப்போது தன்னுடைய தந்தையும் முதல்வருமான கலைஞரை சந்தித்து சென்னை சுற்றுவட்டாரத்தில் மட்டுமே தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பது உடன் நின்றுவிடாமல் தமிழகத்தின் தென் பகுதியிலும் தொழில் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கின்றார்.
அவர் மத்திய வேதியியல் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்த காரணத்தால் தூத்துக்குடியில் இருந்த கோத்தாரி பெர்டிலைசர் நிறுவனத்துடன் நல்ல தொடர்பில் இருந்திருக்கின்றார் இந்த நிலையில் சென்னையில் இருக்கும் கோத்தாரி கட்டிடம் அழகிரியின் மகன் துரை தயாநிதி வசம் வந்தது எவ்வாறு என்பது தொடர்பாக சிபிஐ இப்போது விசாரணையை தொடங்கி இருக்கின்றது.
மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கோத்தாரி குழுமத்துக்கு அழகிரி என்ன உதவி செய்தார் என்பது சம்மந்தமாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு இருக்கின்றது இது தொடர்பாக துரை தயாநிதியை சிபிஐ விசாரணைக்கு அழைத்து இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள்.
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட அழகிரி தன்னுடைய தந்தை கலைஞர் மறைவிற்கு பின்னால் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியானது ஆனாலும் அமைதியாக இருந்த அழகிரி கடந்த தீபாவளி தினத்தன்று தன்னுடைய ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் உரையாடியபோது புதிய கட்சி ஆரம்பிக்கப் படுவது குறித்து ஆலோசனை செய்து இருக்கின்றார். செயல்வீரர் கூட்டங்கள் நடத்தவும் தெரிவித்திருக்கின்றார் இதற்கிடையில் அழகிரியை பாஜக தன் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன தமிழக பாஜகவின் தலைவர் முருகன் அழகிரி பாஜகவிற்கு வந்தால் அவரை வரவேற்கும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் கூறிய அழகிரி அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக எனக்கு எந்த ஒரு எண்ணமும் இல்லை மதுரையில் என்னுடைய ஆதரவாளர்களுடன் விரைவில் நான் ஆலோசனை செய்வேன் தேர்தலுக்கு எப்படியும் ஆறு மாதங்கள் இருக்கும் காரணத்தால் எங்களுக்கு நேரம் இருக்கின்றது நான் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக வதந்தி பரப்புகிறார்கள் நான் பாஜகவில் இணைய போவதாக சிலர் நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார்கள் பாஜகவில் இணைந்து சம்பந்தமாகவோ புதிய கட்சி தொடங்குவது சம்பந்தமாகவோ இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர் நான் பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று முருகன் தெரிவித்திருப்பது அவரது கருத்து என்று தெரிவித்திருக்கின்றார் இந்த நிலையில் கோத்தாரி விவகாரத்தை சிபிஐ கையில் எடுத்திருப்பது அரசியல் ரீதியாகவா என்கின்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.