தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Photo of author

By Hasini

தேர்தலுக்குப் பிறகு உள்ள வழக்குகளை பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பாரதிய ஜனதா தலைவர்களுக்கும் இடையேயான ஏற்பட்டுள்ள கருத்து மோதல் நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த விஷயம். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் இந்த மோதல் எரிமலையாக வெடித்து, இரு தரப்பிலும் இடையே பல சவால்களும் விடப்பட்ட நிலையில், தேர்தலில் திரினாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து அங்கு பல வகையில் வன்முறைகளும் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்குகள் கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் சில காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இதுகுறித்து கொல்கத்தா ஐகோர்ட் மேற்கு வங்க போலீசாருக்கு இந்த விஷயங்களை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

தேர்தலுக்குப்பின் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா வழக்குகளையும் பதிவு செய்யுமாறு கூறியுள்ளது. மேலும் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கும், உணவுப் பொருட்கள் வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் வாக்கெடுப்புக்கு பின் வன்முறை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மேற்குவங்க தலைமைச் செயலாளர் பாதுகாப்பாக வைத்திருக்கும் படியும் கூறியுள்ளது. வன்முறையால் கொல்லப்பட்டதாக கூறப்படும் பாஜக தலைவர் அபிஜித் சர்க்காரின் இரண்டாவது உடற்கூறு ஆய்வு விரைவில் தயார் செய்து வைக்கும் படியும்  உத்தரவிட்டுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கைகலை கருத்தில் கொண்டு  இந்த உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.