கலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா!

Photo of author

By Hasini

கலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா!

Hasini

Celebrities who joined the alliance for the cultural festival! Weeding Festival!

கலாச்சார விழாவுக்கு கூட்டணி சேர்ந்த பிரபலங்கள்! களை கட்டும் திருவிழா!

தெலுங்கானாவில் பதுகம்மா என்று ஒரு மலர் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். இது அவர்களது பாரம்பரிய விழாவாக கொண்டாடுகிறார்கள். ஆந்திராவின் விசாகப்பட்டினம் போன்ற சில நகரங்களில் இந்த சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது தெலுங்கானாவின் ஒட்டுமொத்த கலாச்சார உணர்வை பிரதிபலிக்கும் விதமாகவும் அமைகிறது.

இந்த நிலையில் இந்த திருவிழாவையொட்டி இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் கூட்டணி சேர்ந்து ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். அது ஒரு வீடியோ பாடலாக உருவாகி உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு பேருமே பிரபலங்கள். இவர்கள் தனித்தனியாக ஒரு வேலையை செய்தாலே அந்த சாதனை உச்சத்தைத் தொடும். இரண்டு பேரும் சேர்ந்து செய்தால் நினைத்துப்பாருங்கள் அதனுடைய வெளிப்பாடு தன்மை எப்படி இருக்கும் என்று, கண்டிப்பாக பிரம்மாண்டமாக இருக்கும் அல்லவா. அந்த பாடல் மிகவும் அருமையானதாக உள்ளது.