தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் உள்ள நிலையில் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது இந்நிலையில் அவர்கள் பற்றி ஒரு சில தகவல்கள் பரவி வருகின்றது. திருச்சி சூர்யா யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது அமலாக்கத்துறை ரெய்டுகள் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அமலாக்க துறையிடம் சில ஆதாரங்கள் உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். உதயநிதியின் நட்பு வட்டம் சிக்கலில் உள்ளது. ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ஜி ஜி மற்றும் ரத்தீஷ் ஆகியோர் மாட்டுவார்கள். உதயநிதி ஸ்டாலின் அரசியலில் தனது திறமைகளை வெளிகாட்டி வரும் நிலையில் இப்போது அவர் குறி வைக்கப்பட்டுள்ளார். இவர்களிடம் கருப்பு பணம் உள்ளது என்றால் அந்த பணத்தை வைத்து தான் சம்பளம் கொடுக்கப்படுமா அதனை தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் வாங்கி இருந்தால் அவர்கள் மாட்டுவார்கள். அந்த பணம் எங்கே சென்றுள்ளது. எந்தெந்த படங்களுக்கு கருப்பு பணம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது, எப்படி படம் பெற்றுள்ளனர் என அமலாக்கத்துறை விசாரணை செய்வார்கள் அந்த சம்பந்தப்பட்ட பணம் விக்னேஷ் சிவனுக்கும் மற்றும் அட்லி ஆகியோருக்கும் சென்று இருக்கிறதா எனவும் விசாரணை மேற்கொள்வார்கள். மேலும் சினிமா மற்றும் வேறு துறையைச் சேர்ந்த யாராக இருந்தாலும் பணம் எங்கே சென்றுள்ளது என்று விசாரிக்கப்படும்.
உங்களிடம் உள்ள கருப்பு பணம் யாரிடமெல்லாம் சென்றுள்ளது என்று விசாரணை செய்தால் அவர்கள் மேல் இடத்திற்கு செல்வார்கள். இப்போது கிரவுண்ட் ரிப்போர்ட்டை எடுத்து விட்டனர். இதை வைத்து வழக்கை வலுவாக்கி அடுத்த கட்ட விசாரணைக்கு செல்ல உள்ளனர். திமுக தற்போது அவசர அவசரமாக டெல்லிக்கு செல்ல காரணம் என்ன. இப்போது இருக்கும் நடைமுறையில் சென்றால் திமுக மீண்டும் வெற்றி பெறும். கடந்த தேர்தலின் பொழுது திமுக கொடுத்த வாக்குகளை நிறைவேற்றியுள்ளது. இதனால் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள். இதனை மாற்றவே ஸ்டாலின் குடும்பத்தை கைது செய்யவும், பல அமைச்சர்களை கைது செய்யவும் டெல்லி தயாராக உள்ளது. இதுதான் டெல்லியின் பிளான் மற்றும் செந்தில் பாலாஜி முன்னதாகவே சரண்டர் ஆகினார். அவர் டெல்லியிடம் சரண்டர் ஆகியுள்ளார்.
ரத்தீஷ் பற்றி எல்லாம் யாருக்கும் தெரியாது, அவர்கள் பெயரெல்லாம் எப்படி வெளியே வந்தது அவர்களெல்லாம் ஏன் தலைமறைவாக உள்ளனர் என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இவர்களை எல்லாம் அமலாக்கத்துறை ரைடு விடுங்கள் என்று செந்தில் பாலாஜி தான் கூறியிருக்கின்றார். அவர்கள் இத்தனை காலம் வெளியே தெரியாமல் இருந்த நிலையில் இப்போது எப்படி வெளியே சிக்கி உள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிமுகவை கட்டுப்படுத்தி விட்டனர். அடுத்து திமுகவை அடித்து காலி செய்ய இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். திருச்சி சூர்யாவின் இந்த பேட்டியானது தற்போது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.