இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்! 

Photo of author

By Sakthi

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனையை முறியடித்த நிர்மலா சீதாராமன்!
இந்தியா முழுவதும் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட்டை இன்று(ஜூலை23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்கின்றார். மேலும் இதன் மூலமாக புதிய சாதனை படைக்கவுள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதன் மூலமாக பாஜக கட்சி கூட்டணி கட்சிகளின் உதவியுடன் இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. மேலும் நரேந்திர மோடி அவர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார்.
இதையடுத்து அனைவரும் மத்திய பட்ஜெட் எப்பொழுது தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்த்து வந்தனர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அமைச்சரவையில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கின்றார்.
அனைவரும் எதிர்பார்க்கப்படும் இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்தும் நபர்களுக்கு உச்ச வரம்பில் மாற்றம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தன்னுடைய 7வது பட்ஜெட்டை இன்று(ஜூலை23) தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலமாக நிர்மலா சீதாராமன் அவர்கள் முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் அவர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
அதாவது 1959 முதல் 1964ம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்கள் தொடர்ச்சியாக 6 மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று(ஜூலை23) நிர்மலா சீதாராமன் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து மொரார்ஜி தேசாய் அவர்களின் சாதனையை முறியடிக்கவுள்ளார்.