18 மாத நிலுவை தொகை; மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா!

0
22

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய 18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகை குறித்து கோரிக்கை தொடர்ந்து எழுந்து வரும் நிலையில் டிஏ நிலுவை தொகை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் பெரும் தொகையை பெறுவார்களா எனவும் கேள்வி எழுந்து வருகின்றது. ஐந்து ஆண்டுகளாக இழப்பிற்கு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்குமா எனவும் கேள்வி எழுப்பப்படும் நிலையில் அண்மையில் டி ஏ உயர்வு அறிவிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியானது.

மேலும் தேசிய குழுவின் நிரந்தரக் குழுவின் 63வது கூட்டம் டெல்லியில் உள்ள சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட நிலையில் அந்த கூட்டத்தில் மத்திய ஊழியர்கள் தொடர்பான பல முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதங்கள் முன்வைக்கப்பட்டது.

மேலும் அதில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டிஏ மற்றும் டி ஆர் நிலுவைத் தொகை வழங்குவதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் அவர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் 2020 மார்ச் முதல் 2021 ஜூன் வரையிலான 18 மாதங்களுக்கான டிஏ மற்றும் டி ஆர் தொகையை தொற்று நோய்களின் காரணமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதனை ஊழியர்களுக்கு உடனடியாக தர வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்தது வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு நிலுவை டிஏ மற்றும் டி ஆர் வழங்குவதை சாத்தியமில்லை. எட்டாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 2026 ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அதன் நிலுவைத் தொகையுடன் சேர்த்து வழங்கப்படும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Previous articleஆதார் அட்டையில் இந்த அப்டேட்டை உடனே பண்ணுங்க; இன்று தான் கடைசி நாள்!
Next articleதையல் தெரிந்த பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்; மிஸ் பண்ணிடாதீங்க உடனே விண்ணபியுங்கள்!!