இலங்கை கலவரம் எதிரொலி- தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வைத்திடுக! மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

0
134

இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடி உள்ளிட்டவை அதிகமாகி வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து விதமான பொருட்களும் அதிக விலையில் விற்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, இலங்கையின் குடிமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிரார்கள்.

இதன் காரணமாக. இலங்கை அரசியல் கட்சி தலைவர்களும், சட்டசபை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொது மக்களால் தாக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. அதோடு பிரதமராக இருந்த ராஜபக்சே இல்லம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது.

அதோடு பல நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை பொதுமக்கள் அடித்து விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில். அங்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் வன்முறை வெடித்திருக்கிறது. இதனால் பதற்றம் நிலவுகிறது. இலங்கையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

அந்த நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, அகதிகளுடன் இணைந்து தேசவிரோத கும்பல்களும் கடல் மூலமாக இந்தியாவிற்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

ஆகவே தமிழக பகுதிகளை உஷார் படுத்துமாறு மாநில காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இலங்கையில் நேற்றைய தினம் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது கைதிகள் 58 பேர் தப்பி ஓடி விட்டனர். இந்த கைதிகள் கடல் மூலமாக இந்தியாவுக்குள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாகவும், விடுதலைப்புலிகள் போதை பொருள் கும்பல், போன்றோர் ஊடுருவ வாய்ப்பிருப்பதால் கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம், கடலோரப் பகுதியில் பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

Previous articleஇந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!
Next articleதிருமணம் நடக்காத விரக்தியால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்! கடலூரில் வெறிச்செயல்!