பிறந்தநாளை கொண்டாடும் மத்திய அமைச்சர்…! வாழ்த்து மழையில் நனைத்த முதல்வர்…!

0
168

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் பிறந்தநாளை எடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு.எல். முருகன், அண்ணாமலை ஆகியோர் திரு அமித்ஷாவிற்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தினம் தன்னுடைய 56 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே அவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள், அதேபோல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அமித்ஷா அவர்களுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அவர் பூங்கொத்துடன் கூடிய வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் எழுதி இருக்கின்றார். அக்கடிதத்தில் தன்னலம் பாராமல் நாட்டிற்காக சேவை செய்யும் உங்களுக்கு வல்லமையை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் திரு எல். முருகன் தன்னுடைய வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, எங்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜி இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரவேண்டும் எனவும், மற்றும் நாட்டிற்கு பல வருடங்களாக தாங்கள் செய்துவரும் சேவைகளுக்காகவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நாட்டுப்பற்று ஒன்றே உயிர் மூச்சு உள்ளத்தில் உறுதி சிந்தனையில் தெளிவு காரியத்தில் கவனம் மற்றும் தைரியமே வாழ்க்கை என வாழ்ந்து வரும் அமித்ஷா அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

Previous articleஅரசு விழாவில் துணை முதல்வரின் புகைப்படம் புறக்கணிப்பு…! ஆதரவாளர்கள் கொந்தளிப்பு…!
Next articleசீனாவின் கொரோனா தடுப்பு மருந்தா..! நாங்க வாங்க மாட்டோம்; திட்டவட்டமாக கூறிய அதிபர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here