14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Photo of author

By Sakthi

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!

Sakthi

Updated on:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகும் எனவும் நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் மாநிலத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் மஞ்சளாரில் 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது