இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை! 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

வங்க கடலில் நடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னை அருகே நேற்று முன்தினம் மாலை கரையைக் கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை உட்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது.

அதோடு தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரையில் ஓரிரு பகுதிகளில் கனமழை, ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

நாளைய தினம் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, தேனி, கோயமுத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை புதுச்சேரி, கடலூர் மற்றும் மற்ற மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாளை மறுதினம் அதாவது திங்கள் கிழமை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, நீலகிரி, ஈரோடு, தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மற்ற வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

வரும் 16ம் தேதி ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழையும் மற்ற வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக பகுதிகளில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கேரள கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 60 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் வீசும் அதற்கான வாய்ப்பு இருக்கிறது ஆகவே மீனவர்களின் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நான்கு பகுதிகளில் மிக கனமழை 24 பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இதில் அதிகபட்சமாக 15 சென்டிமீட்டர் கன்னிமார், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் தலா 14 சென்டிமீட்டர், பெருஞ்சாணி 11 சென்டிமீட்டர், மயிலாடி, சோழவரம், கலசப்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் 10 சென்டிமீட்டர். கும்மிடிப்பூண்டி 9 சென்டிமீட்டர் ,டிஜிபி அலுவலகம், ஊத்துக்கோட்டை, வெம்பாக்கம், ஜமுனாமரத்தூர், தலா 8 சென்டிமீட்டர், எம்ஜிஆர் நகர், அயனாவரம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஏற்காடு, காஞ்சிபுரம், கலவை, கொட்டாரம், செங்குன்றம், சோளிங்கர், நாகர்கோவில், அரக்கோணம், பொன்னேரி, காட்பாடி ,உள்ளிட்ட பகுதிகளில் தலா 7 செண்டி மீட்டர் மழையும், எம்ஆர்சி நகர், பேச்சிப்பாறை, திருவாலங்காடு, ஸ்ரீபெரும்புதூர், தரமணி ,திருக்கழுக்குன்றம், சென்னை நுங்கம்பாக்கம், தருமபுரி, ஆலந்தூர், ஆம்பூர் செங்கம், திருவண்ணாமலை, உள்ளிட்ட பகுதிகளில் தலா ஆறு சென்டிமீட்டர் மழையும் உற்பட பல பகுதிகளில் மழை பெய்திருக்கிறது.