தமிழக மக்களே உஷார்! இந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

0
133

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக மாவட்டங்கள் தேனி, தென்காசி திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி மற்றும் காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் என்றும், இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, மேல் பவானி, தேவாலா, கூடலூர், பஜார், பந்தலூர் தாலுக்கா அலுவலகம், போன்ற இடங்களில் தல 19 சென்டிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.