தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது இதன் காரணமாக, கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மதித்திருக்கின்ற செய்தி குறிப்பில் தமிழக பகுதிகளில் நினைவு வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் கனமழை தொடரும். நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், மற்றும் ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, போன்ற மாவட்டங்களில் நாளை ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. எதிர் வரும் நாட்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நேற்று காலை நிலவரத்தினடிப்படையில் அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தென்கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் ஆகவே வரும் 9ம் தேதி வரையில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.