எச்சரிக்கை அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

0
140

வங்கக்கடலில் ஏற்பட்ட அசாணி புயல் வங்கக் கடல் பகுதியிலிருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்றிரவு நிலைகொண்டது.

இதையே வடக்கு வடகிழக்கு திசையில் வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும், இன்றோ அல்லது நாளையோ புயலாக வலு பெறக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஆகவே தமிழகம், புதுவை, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் 14ஆம் தேதி வரையில் 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

Previous articleபெற்ற மகளையே கற்பழித்த கூலித் தொழிலாளி! பரபரப்பு தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
Next articleபுதுசு கண்ணா புதுசு! இனி ஷாப்பிங் செய்ய ஏடிஎம் கார்டு தேவையில்லை இது மட்டும் போதும்!