மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் வரும் 27ஆம் தேதி வரையில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகலாம். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. அதோடு நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் 24 மணி நேரத்தில் திருவள்ளூர் மாவட்டம், சோழவரம், தாமரைப்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி, 2 செ.மீ கீழ்பெண்ணாத்தூர், பொன்னேரி, பூண்டி, தண்டையார்பேட்டை, ஆவடி, சென்னை, நுங்கம்பாக்கம் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.