தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த முக்கிய எச்சரிக்கை!

0
153

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இன்று தமிழக மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல நாளை புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், அதே போல நாளை மறுநாள் மற்றும் வரும் 30ஆம் தேதி உள்ளிட்ட தினங்களில் தமிழகம் ,புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நாளை வரை குமரி கடல் பகுதி மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் அதோடு தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கான வாய்ப்புள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

Previous articleகட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லாத நிலையில் இடைத்தேர்தல்! ஒப்புதல் வழங்கப் போவது யார் அதிமுகவிற்கு ஏற்பட்ட புதிய சிக்கல்!
Next articleவாகன ஓட்டிகள் அதிர்ச்சி! சுங்கச்சாவடி கட்டணம் உயர்வா?