குழந்தைகளை குறிவைக்கும் சந்திபுரா வைரஸ்! சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு குழந்தை பலி!

Photo of author

By Sakthi

குழந்தைகளை குறிவைக்கும் சந்திபுரா வைரஸ்! சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு குழந்தை பலி!
குஜராத் மாநிலத்தில் குழந்தைகளை குறிவைத்து பரவி வரும் சந்திபுரா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளது. இதனால் வைரஸ் தொற்றுக்கு பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இன்று வரையிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆட்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் உலகம் முழுவதிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகிஸமக்களை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்திநருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் சந்திபுரா என்னும் வைரஸ் தொற்று பரவி வருகின்றது.
குஜராத் மாநிலத்தில் ஆரவல்லி மாவட்டம் இருக்கின்றது. இந்த ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள மொட்டா கந்தாரியா என்ற கிராமத்தில் தான் இந்த சந்திபுரா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
சந்திபுரா வைரஸ் தொற்றுக்கு 4 வயது குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏற்கனவே சந்திபுரா வைரஸ் தொற்றுக்கு 5 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் 8 பேர் உயிரிழந்தனர். குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த சந்திபுரா வைரஸ் தொற்றுக்கு இன்னும் மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை.