Chandrababu Naidu: ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஜனசேனா பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகின்றது. இந்நிலையில் ஆந்திராவில் உள்ள கடப்பா மாவட்டத்தில் தெலுங்கு தேசம் துவங்கி சுமார் 43 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனால் மூன்று நாள் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த மாநாடு தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது நாட்டில் பல கட்சிகள் இருந்தாலும் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே கட்சி தெலுங்கு தேசம்.
தற்போது மத்திய அரசு எடுக்கக் கூடிய பல்வேறு முடிவுகளில் நம்முடைய மாநிலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. அனைத்து துறைகளிலும் நாட்டுக்கே முன்னுதாரணமாக ஆந்திரா விளங்கி வரும் நிலையில் மேம்பாடு, சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சியாக இவற்றை தாரக மந்திரமாக கொண்டு நாம் செயல்படுகிறோம். நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறும்படி கடந்த காலத்தில் மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்ட நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றது.
புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் கிடையாது. நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றது. எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் பணம் பரிமாற்றம் செய்கின்றனர். அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளுக்கு அவசியம் ஏற்படுவதில்லை அதனால் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் இது அரசியலுக்கு நிச்சயம் பயனளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும். மேலும் கருப்பு பணத்தை ஊக்குவிப்பதை நாங்கள் எப்பொழுதும் ஆதரிக்கவில்லை எனவும் பேசினார்.