ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. மேலும் ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவும் அதற்க்கு இணையான சில முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.
அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வரும் இபிஎஸ், அதிமுகவை ஒருங்கிணைப்பதிலும், உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதிலும் சற்று முன்னுக்கு பின் முரணாகவே செயல்பட்டு வருகிறார். இவரின் இந்த செயல் பாஜகவின் பின்னடைவிற்கு காரணமாக அமைந்து விடுமோ என்ற பயம் மத்திய அமைச்சர்களுக்கு உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி அமைத்த உடனேயே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதவியிலிருந்து நீக்கப்பட்டார், டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் NDA கூட்டணியிலிருந்து விலகினார்கள்.
இவ்வாறு இபிஎஸ் வருகையால் அதிமுக மட்டுமல்லாது பாஜகவும் பலமிழந்து காணப்படுகிறது. இதனை சரி செய்ய பாஜக ஒரு திட்டம் திட்டியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனை என்பதால் அவரை மாற்றி விட்டு வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் அது பாஜகவிற்கு சாதகமாகவும், பாஜக-அதிமுக கூட்டணி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக அமையும் என்றும் பாஜக நினைக்கிறது.
இதற்கான பணிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், மாற்று வேட்பாளரை தேடும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இபிஎஸ்யை தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் NDA கூட்டணியில் இணைவோம் என்று தினகரன் கூறியதால், இந்த செய்தி அவருக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றோர் NDA கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.