மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?

0
231
Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?

விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய இரண்டு நிகழ்வுகள் காரணமாகவுள்ளன. முதலில் மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் இரண்டாவது தமிழக சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வேண்டும் என்று சிவசேனா கட்சி கேட்கிறது, ஆனால் 1960 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை பாஜகவை சேர்ந்த பட்னாவிஸ் மட்டுமே முழுநேர முதல்வராக 5 வருடம் ஆட்சியில் இருந்துள்ளார், எனவே எக்காரணம் கொண்டும் முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

ஆனால் இதற்கு பதிலாக நிலைமையை சமாளிக்கும் விதமாக கூட்டணி கட்சியான சிவசேனாவிற்கு பாஜக மற்றொரு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதாவது சிவசேனாவிற்கு மத்திய அமைச்சரவையில் இரண்டு முக்கிய துறைகளை தருவதாக உறுதி அளித்தது, அதனை வருகின்ற குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்பாக வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.இதற்காக உடனடியாக அடுத்த மாதம் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today
Dr Ramadoss meet with Prime Minister Modi-News4 Tamil Latest Online Tamil News Today

அடுத்ததாக தமிழக அரசியல் சூழ்நிலை அதிமுக தலைமையிலான ஆளும் அரசிற்கு சாதகமாக திரும்பி வருவதால் அதற்கேற்றவாறு மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறபடுகிறது. கடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வான ஒரே எம் பி ரவீந்திராத் மட்டுமே, முன்பே அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

வாய்ப்பு மறுக்கபட்டதிற்கு காரணமாக உள்கட்சி பூசல் காரணமாக கூறபட்டாலும் அவர் புதியவர் என்ற காரணத்தால் தான் மறுக்கப்பட்டது என்றும் தகவல்கள் கசிந்தன. மேலும் மாநிலங்களைவைக்கு அதிமுக சார்பில் அனுபவமுள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டது. இந்நிலையில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களைவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவர் ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்புமணி ராமதாஸ் அவரது பதவி காலத்தில் சுகாதாரத்துறையில் பல்வேறு சாதனை திட்டங்களை கொண்டு வந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. இதனால் அவருக்கு மீண்டும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இதையெல்லாம் உறுதி செய்யும் விதமாக தான் சமீபத்தில் பிரதமர் மோடி,பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு தமிழகத்திற்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

அந்த வாய்ப்பு அதிமுக எம்பியான ரவீந்திராநாத்துக்கா அல்லது அதிமுக கூட்டணி கட்சியான பாமகவின் அன்புமணி ராமதாஸுக்கா அல்லது தமிழக பாஜகவில் மூத்த தலைவரான H.ராஜா போன்றோருக்கா என்று போட்டி கிளம்பியுள்ளது.

அதிமுக மற்றும் பாமக கூட்டணி விக்கிரவாண்டி தேர்தலில் எதிர்பார்ப்பை விட மிகப்பெரிய வெற்றியை அளித்த நிலையில் அதற்கு பிரதிபலனாக அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க அதிக வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

Previous articleஅரசு மருத்துவர்கள் போராட்டம் திடீர் வாபஸ்! காரணம் என்ன?
Next articleஜெயலலிதாவின் திரைப்படத்திற்கு எதிராக தீபா நீதிமன்றத்தில் வழக்கு!