இன்று தாக்கல் ஆகிறது தமிழக வேளாண் பட்ஜெட்! புதிய சலுகைகள் கிடைக்குமா? காத்திருக்கும் தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள்!

0
137

தமிழ்நாட்டில் நேற்றைய தினம் இந்த நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அதே போல பல்வேறு துறைகளுக்கும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, பல்வேறு அறிவிப்புகளும் வெளியானது, பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அதிலும் அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றது. இது பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதி அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்றைய தினம் தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.சென்ற 10 வருடகாலமாக பன்னீர்செல்வம் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையில் நடப்பு வருடத்திற்கான முழுமையான நிதிநிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் போன்ற பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சட்டசபையில் இன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அந்தத் துறையின் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவிருக்கிறார்.

இதற்கு முன்பாக வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக மாநில அளவிலான விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களுடைய கருத்துக்களையும் பெற்றிருக்கிறார். அதேபோல வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து 250-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நேரடியாக கருத்துக் பெற்றுள்ளதாகவும், அவர் கூறியிருக்கிறார்.

அதோடு விவசாயிகளுடைய எதிர்பார்ப்புக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் விடை கிடைக்கும் என்றும், இயற்கை விவசாயத்திற்கான திட்டங்கள் தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்றும், அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அதனடிப்படையில், வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல புதிய சலுகைகளும் அறிவிப்புகளும் வெளியாகும் என்ற நம்பிக்கையுடன் தமிழக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

Previous articleகட்சித் தலைமைக்கு அதிர்ச்சியளித்த அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள்!
Next articleகொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு! எச்சரித்துள்ள மத்திய அரசு!!