சென்னை எம்ஐடி கல்லூரி விடுதியில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோய்தொற்று உறுதி!

0
141

சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் இருக்கிற அண்ணா பல்கலைக்கழக கல்லூரி வளாகம் இருக்கிறது இங்கே வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். விடுதியில் தங்கியிருந்த 1,650 மாணவர்களில் சிலருக்கு சென்ற சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு உண்டானது.

இதன் காரணமாக, விடுதியில் தங்கியிருந்த எல்லோருக்கும் நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 9ஆம் தேதியிலிருந்து 1617 மாணவர்களுக்கு தொடர்ந்து நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக 60 நபர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது இதில் 42 மாணவர்கள், 19 மாணவிகள், உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தார்கள்.

இவர்களில் 53 பேர் கல்லூரியில் இருக்கின்ற அந்தந்த விடுதி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது மீதம் இருப்பவர்கள் வீட்டில் இருந்து தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பாதிப்பு இல்லாதவர்களும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன.

தாம்பரம் மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பாக விடுதியில் தங்கி இருக்கின்ற மற்ற மாணவ, மாணவிகளுக்கு நோய்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்னும் பலருக்கு நோய்த்தொற்று பரிசோதனை முடிவு வர வேண்டி உள்ளது, அதில் மேலும் பலருக்கு நோய்த்தொற்று உறுதியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எம்ஐடி கல்லூரி மாணவ, மாணவிகள், 67பேர் ஒரே சமயத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியது. உடனடியாக தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் ரவி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத், உள்ளிட்டோர் எம்ஐடி கல்லூரி விடுதியில் ஆய்வு செய்தார்கள். விடுதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக எம்ஐடி கல்லூரி டீன் தியாகராஜனிடம் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அப்போது தாம்பரம் நகராட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த மாநகர காவல்துறை ஆணையர் ரவி தெரிவித்ததாவது, முதல்கட்டமாக 67 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பதால் அவர்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்வது, நோய்த்தொற்று இல்லாதவர்களை வீட்டுக்கு அனுப்புவது, தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறியிருக்கிறார்.

அதோடு நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தாம்பரம் மாநகராட்சி ஆணையர், தாம்பரம் மாநகர காவல்துறையினர், ஒன்றாக இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக எம்ஐடி சார்பாக கல்லூரி டீன் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். மாநகராட்சி மற்றும் காவல் துறை சார்பிலும் ஆட்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு மணி நேரமும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க கண்காணிக்கப்பட்டு வருகிறது, பொதுமக்கள் கண்டிப்பாக வீட்டில் இருந்தாலும் முதல் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். இரண்டு தவனை தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு உள்ளோம் என்று யாரும் அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். பொதுவெளிகளில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது காவல்துறையினர் சார்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் தெரிவித்ததாவது, எம்ஐடி கல்லூரி மாணவர்கள் 67 பேர் பாதிக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து மேலும் 350 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்து இருக்கிறோம். இவர்களுடன் சேர்ந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளி வர வேண்டியிருக்கிறது என கூறி இருக்கிறார்.

சென்ற 1ம் தேதியிலிருந்து இந்த கல்லூரி மாணவர்களுக்கு இணையதள வகுப்புகள் தான் நடைபெற்று வருகிறது, இதன் காரணமாக, கல்லூரி விடுதியில் தங்கி இருக்கின்ற 1,650 மாணவர்களைத் தவிர இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலமாக வகுப்புகளை கவனித்து வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், நோய் தொற்று பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். இதுவரையில் எங்கும் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாமல் 1 ,2 என்று மட்டுமே நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் எம்ஐடி கல்லூரியில் முதன்முதலாக ஒரே சமயத்தில் மொத்தமாக 67 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

Previous articleநீங்கள் இந்த ராசியா? இதோ உங்களின் காதலுக்கு உகந்த நாள் இன்று தான்! இன்றைய ராசி பலன்!
Next articleஆளுநர் உரைக்கு எதிர்ப்பு! ஆளும்கட்சியின் முதுகில் குத்திய கூட்டணி கட்சி சட்டசபை உறுப்பினர்கள்!