ஸ்டாலினுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கின்றது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவின் அரசையும் விமர்சனம் செய்கிறார்கள் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக பல காலகட்டங்களில் தமிழக அரசின் சார்பாக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தன்மீதான அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மற்ற அவதூறு வழக்குகள் சம்பந்தமாக விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்பாக இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது, அப்போது முதல்வர் தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மதிப்பைப் பெற்று இருக்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் முதலமைச்சர் தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது கண்டனத்திற்கு உரியது. இது போன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், அரசியல் லாபத்திற்காக ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதுபோன்ற தேவையில்லாத கடுமையான வார்த்தைகளை பொது இடங்களில் பேசுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகல்ல என்று அறிவுறுத்தி இருக்கின்றார்.

முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள், மீது இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்குமானால் நீதிமன்றத்தை அணுகலாம் என்ற நீதிபதி, கருத்து சுதந்திரம் என்கின்ற பெயரில் மேலும் இது போன்ற கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது, மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் இதனை அனைவரும் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். கிரிமினல் அவதூறு வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்ய முற்படுவதால் தேவையில்லாத விமர்சனங்களை முன்வைப்பதற்கான உரிமைகளை அவர்களுக்கு அளிக்கின்றது, என அர்த்தம் கிடையாது எனவும் நீதிபதி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்கி அனேக மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்ற அவதூறு வழக்குகளில் விசாரணையை ஜனவரி மாதம் 7ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.