அது மட்டும் முடியவே முடியாது! மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

Photo of author

By Sakthi

நகரப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. இதுதொடர்பாக உரையாற்றிய நீதிபதிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள்.

தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது, மாநில தேர்தல் ஆணையம் நோய்த்தொற்று தடுப்பு விதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

விதிமீறல் இருக்குமானால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் 5 வருடங்களுக்கு மேல் நடத்தப்படவில்லை அதனை தொடரக்கூடாது என்று கூறி இருக்கிறார்கள்.

தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் சாசன விதிகளை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகள் புறக்கணிக்கக் கூடாது என்று கூறியிருக்கின்றசென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் அறிவித்தால் அது நோய் தொற்று தடுப்பு விதிகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது.