சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்! யார் அந்த நீதிபதி? குடியரசுத் தலைவர் அதிரடி!

Photo of author

By Sakthi

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பேனர்ஜி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

தமிழகம் போன்ற பெரிய மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த ஒரு நீதிபதியை திடீரென்று மேகாலயா போன்ற சிறிய மாநிலத்திலுள்ள நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதற்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார்கள்.மேலும் இது தொடர்பாக அந்த சமயத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வந்தது.

மேலும் மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட சஞ்சீவ் பானர்ஜிக்கு பிரிவு உபச்சார விழா நடத்துவதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் அந்த விழாவில் பங்கேற்காமலேயே மேகாலயா புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது மூத்த நீதிபதியாக இருந்த எம் துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

இதனை அடுத்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி முனீஸ்வர் நாத் வண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் . இந்த சூழ்நிலையில், பொறுப்பு நீதிபதியாக இருந்த அவரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்றம் கொலிஜியம் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்தது.

அதனடிப்படையில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.