சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது.

சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் எனவும், அதன்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள்.

இந்த நிலையிலே, அடுத்த வருடம் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும், என வழக்கறிஞர் ஆனந்த் பாபு தொடர்ந்த வழக்கில், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும், குரல் எழுப்பி வருகின்றனர். கையில் அதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கானது, நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்தியநாராயணா, ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நேரத்தில், நீதிபதிகள் ஜாதியில்லாத சமூகத்தை உருவாக்க வேண்டிய நேரத்தில், ஏன் இதுபோன்ற வழக்குகள் தொடரப்படுகின்றன, என கேள்வியெழுப்பி இருக்கிறார்கள்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், மக்களைபிளவுபடுத்தும் விதமாக, சாதிவாரி கணக்கெடுப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையிலான ஆணையத்தை தமிழக அரசு அமைத்திருக்கின்றது இந்த நிலையிலே சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த இந்த மனுவை ஏற்க இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறார்கள்.