Chennai High Court: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக மருத்துவ முதுகலை (pg)மாணவர்களின் தேர்வை ரத்து செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் (2021-22) மருத்துவ முதுகலைப் பட்டம் படித்து வரும் 85 மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தங்களது இறுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில் மருத்துவ முதுகலை பட்டப்படிப்பு இறுதி ஆண்டு பயின்று வரும் நாங்கள் நவம்பர் 29ம் தேதி ஆராய்ச்சிக் கட்டுரைகளை இணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால் மோசமான இணைய சேவை காரணமாக சரிவர ஆய்வுக்கட்டுரைகளை இணையத்தில் பதிவு செய்ய முடியவில்லை. மேலும், டிசம்பர்-9ஆம் தேதி இறுதித் தேர்வை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் இறுதி தேர்வுக்கு கால அவகாசம் மிக குறுகிய கால இடைவேளை இருந்தால் தங்களால் முறையாக தேர்வுக்கு படிக்க முடியவில்லை, அதே சமயம் முறையாகவும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பிக்கவும் முடியவில்லை.
எனவே இறுதி தேர்வுகளை டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து இருந்தார்கள். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை வந்தது. மாணவர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் இறுதி தேர்வு எழுதுவதற்கு உரிய கால இடைவெளி இல்லாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதாக சுட்டிக்காட்டி இருந்தார்கள்.
அதை விசாரித்த நீதிபதிகள் தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இறுதித் தேர்வை 2025-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்கள்.