சென்ற மாதம் ஆர் எஸ் எஸ் அமைப்பு 50க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு நடத்துவதற்கு திட்டமிட்ட இருந்தது ஆனால் இதனை தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். திருமாவளவன் ஆர்எஸ்எஸ் அமைப்பு அனைவருக்கும் நடத்துவதாக தெரிவித்து இருந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக மனித தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆர் எஸ் எஸ் அணிவகுப்புக்கு காவல்துறையினர் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
உடனடியாக ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதிக்கு பதிலாக நவம்பர் மாதம் ஆறாம் தேதி அதாவது நாளைய தினம் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
அதோடு மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்புக்கு பல்வேறு நிபந்தனகையும் விதித்திருந்தது உயர்நீதிமன்றம்.
அதன்படி அனுமதி விளங்காததால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜிகே இளந்திரையன் நவம்பர் மாதம் 6ம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த வழக்கு சென்ற முறை விசாரணைக்கு வந்த போது கடலூர் பெரம்பலூர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் 23 இடங்களில் உள்ளடங்கு கூட்டமாக நடத்தை கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டது மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பான உளவுத்துறை அறிகையும் தாக்கல் செய்யப்பட்டது இந்த அறிக்கையை பார்த்த பிறகு உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்த நீதிபதி விசாரணையை நேற்றைய தினத்திற்கு ஒத்தி வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது உளவுத்துறை அறிக்கையை ஆய்வு செய்வதில் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் பதிவான வழக்குகளை சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அதனை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
அதோடு உளவுத்துறை அறிக்கையில் பதட்டம் நிறைந்த பகுதிகளாக சுட்டிக் காட்டப்பட்ட பொள்ளாச்சி, கோவை, மேட்டுப்பாளையம், பல்லடம், நாகர்கோவில், அருமனை உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தது சரிதான் என்று உத்தரவிட்ட நீதிபதி, இந்த பகுதிகளில் அணிவகுப்பு நடத்த வேண்டும் என்று அனுமதி கூறி இரண்டு மாதங்களுக்கு பின்னர் விண்ணப்பிக்கலாம் என்றும் அவற்றை பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மற்ற 44 இடங்களை பொருத்தவரையில் சுற்று சுவருடன் கூடிய மைதானங்கள் ஸ்டேடியங்களில் அணிவகுப்பும் பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்ட நீதிபதி இந்த நிகழ்வின்போது பங்கேற்பாளர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பொது மக்களுக்கோ, போக்குவரத்துக்கோ இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பாடல்கள் பாடவோ, தனிப்பட்ட நபர்கள், மதம், ஜாதி தொடர்பாக தவறாக பேசவோ கூடாது என்றும், தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பாக பேசவும், கருத்து தெரிவிக்கவும், கூடாது என்றும் உத்தரவிட்ட நீதிபதி, இந்திய ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் விதத்தில் செயல்பட கூடாது என்றும், லத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்பவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, முதலுதவி, ஆம்புலன்ஸ், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குழல் ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது எனவும் புது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் அதற்கான இழப்பீட்டை செலுத்துவதாக உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதித்த நீதிபதி இந்த நிபந்தனைகளை மேலும் பட்சத்தில் காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று உத்தரவு பிறப்பித்தார்.