weatherஅடுத்த 48 மணி நேர வானிலை நிலவரத் தகவலை கொடுத்து உள்ளது சென்னை வானிலை மையம்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில்,அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. இத்த நிலையில் தமிழகத்திற்கு தென் கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல் சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது மேலும் வழு பெரும் என்றும் கூறப்படுகிறது.இந்த காற்றழுத தாழ்வுப் பகுதி மேலும் வழுபெற வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் மேற்க்கு வங்க கடலில் உருவாக்கி இருத்தால் அது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது தற்போது வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகி இருக்கிறது. இதனால் வரும் 11தேதி தமிழகத்தில் மழைப் பொழிய வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் கடலோர மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக இராமநாதபுரம் ,டெல்டா மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாட்டங்களான சென்னை,காஞ்சி புரம், செங்கல் பட்டு , திருவள்ளுவர் மாவட்டம் ,கடலூர் ,புதுவை மாநிலத்திற்கு கன மழை பொழிய வாய்ப்பு உள்ளது.
மேலும் நவம்பர்-12ம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்ற தகவலை கொடுத்து இருக்கிறது சென்னை வானிலை மையம்.