சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த முக்கிய தகவல்! தமிழக மக்களே உஷார்!

0
188

இந்த வாரத்தில் தலைநகர் சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்து பரவலாக பெய்து வருகிறது. இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை ஆகஸ்ட் உள்ளிட்ட மூன்று மாதங்களிலும் சராசரி மழை அளவை விட கூடுதலாக மழை பெய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் ஜூன் மாதத்தில் இருந்து இதுவரையில் 372.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்கிறது. சராசரியாக 321. 2 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் இருந்தாலும் இயல்பைவிட அதிகமாக 16 சதவீதம் மழை பெய்திருக்கிறது.

இந்த சூழலில் சென்னையில் இந்த வாரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் நாளைய தினம் மற்றும் இரண்டாம் தேதி உள்ளிட்ட நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

இது தொடர்பாக உரையாடி இருக்கின்ற வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக, நேற்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்றன. மாவட்டங்கள் , தென் மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்தது என கூறியிருக்கிறார்.

இன்றைய தினம் வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இலேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், நாளைய தினம் கடலோர மாவட்டங்கள் அதை ஒட்டி இருக்கின்ற உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழையும் மற்றும் 2 மற்றும் 3ம் தேதிகளில் உள் மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் கணவரையும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக புவியரசன் தகவல் கூறியிருக்கிறார்.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு தனியார் வானிலை விஞ்ஞானிகள் தெரிவிக்கும்போது, செப்டம்பர் மாதத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறி இருக்கிறார்கள்.

Previous articleநாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Next articleஒரு வார காலமாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here