14வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! மும்பையை வெற்றிகொண்ட சென்னை அணி!

0
169

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது கட்ட ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றைய தினம் இரவு ஆரம்பமானது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும், மோதின. இதில் பூவா தலையா வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுப்லஸ்ஸிஸ் மற்றும் ருத்ராஜ் உள்ளிட்டோர் முதல் ஓவரிலேயே பிரிந்து அதிர்ச்சியைக் கொடுத்தார்கள். ரன் எதுவும் எடுக்காமல் டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன் பிறகு வந்த மொயின் அலி ரன் எதுவும் எடுக்காமல் இரண்டாவது ஓவரில் மில்நே பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார். மூன்றாவது ஓவரில் அம்பத்தி ராயுடு ரன் எதுவும் எடுக்காத சூழ்நிலையில், காயம் காரணமாக, களத்திலிருந்து வெளியேறினார். இதனையடுத்து சுரேஷ் ரெய்னா 4 கேப்டன் தோனி 3 என அடுத்தடுத்து பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்கள். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தன மறுபுறம் ருத்ராஜ் நிலையாக நின்று விளையாடி அரை சத்தத்தை கடந்தார்.

இதனைத் தொடர்ந்து வந்த ஜடேஜா முப்பத்தி மூன்று பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்,.கடைசி ஓவர்களில் பிராவோ 3 சிக்சர்களை அடித்து 23 ரன்கள் எடுத்த நிலையில் தன்னுடைய ஆட்டத்தை இழந்தார். நிலையாக நின்று விளையாடிய ருத்ராஜ் 9 பவுண்டரிகளுடன் மற்றும் 4 சிக்சர்களுடன் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியில் சென்னை அணி 20 முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை சேர்த்து இருந்தது மும்பை அணியின் சார்பாக அதிகபட்சமாக மில்னே மற்றும் பும்ரா உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்கள்.

இதனைத்தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் சார்பாக டி காக் மற்றும் அனல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்த டி காக் 17 ரன்களிலும் அவரைத் தொடர்ந்து அன்மோல் பிரிட்ஸிங் 16 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள். இதனை தொடர்ந்து களமிறங்கிய சூரியகுமாரி 3 ரன்களில் இஷாந்த் கிஷன் 11 ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 15 ரன்களும் குணால் பாண்டியா 4 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இறுதி ஓவரில் அந்த அணி வெற்றி பெறுவதற்கு 23 ரன்கள் தேவைப்பட்ட சூழ்நிலையில், ஆடம் மில்னே 15 ரன்களும், இதனை தொடர்ந்து களமிறங்கிய ராகுல் சாகர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.கடைசியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திவாரி 50 ரன்கள் மற்றும் பும்ரா ஒரு ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். அதன்பின்னர் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை மட்டுமே சேர்த்தது.

சென்னை அணியின் சார்பாக அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகளையும், தீபக் சாகர் 2 விக்கெட்டுகளையும், அதேபோல ஹாசெல்வுட் மற்றும் ஷர்துல் தாகூர் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இதன்மூலமாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக புள்ளி பட்டியலில் சென்னை அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், நேருக்கு நேர் சந்திக்கின்றன.

Previous articleமாநில வரலாற்றிலேயே முதல் முறையாக! பஞ்சாப் மாநிலத்தில் மாறும் அரசியல் வரலாறு!
Next articleஇத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!